நாட்குறிப்பு - 17.02.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

இன்னும் நான் சோர்வில் இருந்து மீளவில்லை. எனக்குள் அநேக கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த நாய்க்குட்டி இறந்துவிட்டதாக கூறினார்கள். எனக்குள் குற்ற உணர்வு எழுந்தது. அதை நான் என்னுடனேயே வைத்திருந்திருந்தால், அவள் உயிரோடு இருந்திருப்பாளோ என்ற எண்ணம் மேலோங்க, இரவில் உறங்க முடியாமல் தவித்தேன். அழுதேன். எப்பொழுது இறந்தாள் என்றே தெரியவில்லை. தொட்டி அருகே இருந்த தண்ணியில் விழுந்து இறந்துவிட்டிருந்தாளாம். புழு மேய்ந்ததாம். மார்ஷல் தான் வந்து என்னிடம் கூறினான். அன்பு ராஜ் தான் தொட்டியை சுத்தப்படுத்தினான் என்று வீரா மாமா கூறினார். கட்டி வைத்திருந்த தமிழ் அவிழ்த்துக்கொண்டு துரத்தியதால் தான் இது நேர்ந்தது என்று கூறினார். ஆற்றுப்படுத்த துணை தேவையாக இருந்தது. எலிகளை வேடிக்கைப் பார்த்தேன். இரவில் உடைந்த ஓட்டு வழியே எட்டிப் பார்த்த புளிய மரத்தாளே துணையாக நின்றாள். எனக்கு ஷெல்டரை முடிக்க வேண்டும். நிறைய நாய்க்குடிகளை எடுத்து வளர்க்க வேண்டும். சாலையில் எலும்புக் கூடுகளாய் நிற்கும் நாய்குட்டிகளை பார்க்கும் பொழுது, கண்ணில் இரத்த ஆறே ஓடுகிறது. நான் ஏதாவது செய்ய வேண்டும். நேற்று காலை (24.01.2024...