நாட்குறிப்பு - 20.12.2023 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

அவனுக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. அவன் ஒரு ஆண்பிள்ளை. நாய்களுக்கு நான் தனித் தனிப் பெயர் வைத்துதான் அழைக்கிறேன். தடுப்பூசி பதிவேட்டிலும் எழுதுகிறேன். சில சமயம் ஐந்து ஆறு குட்டிகள் எனும் போது அது முடியாத செயலாகிவிடுகிறது. அவன் மலம் சாதாரணமாக கழிக்கிறான். அவனைத் தடுப்பூசி போட அழைத்துச்செல்லவேண்டும். அவன் நீங்களாவது ஒரு பெயர் சொல்லுங்கள். அப்படியே வைத்துவிடுகிறேன். பெயர் வைப்பது அத்தனை இலகுவாக இல்லை. நிறைய பெயர்கள் வைத்துவிட்டேன். லொடுக்கு, குறள், வெண்பா, கார்த்திகா, ராம், பூம்பா, கோக்கோ,லச்சு, நேத்ரா, லூனா, யாழி, தமிழ், ராஜா, புட்டு, கிட்டு, புசுபுசு, ராபர்ட்… நாய்குட்டிகள் இறந்தபோதெல்லாம் அழுதேன். விபத்தில் நாய்கள் இறந்த போதும்… அழகான ஒரு நாய்குட்டியை பார்த்துவிட்டு வீடு வந்திருப்பேன். அதிகாலை சாத்தனூர் செல்லும் போது நைந்த தோலாக சாலையில் கிடக்கும். மனம் பதறி போகும். கவனமாக வாகனங்களை ஓட்டுங்களேன். மனித குழந்தையைக் காட்டிலும் நாய்குழந்தைகள் அ...