நாட்குறிப்பு - 01.02.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

மனம் கனத்துக்கிடக்கிறது. கையில் எடுத்த வேலை பெரிதோ என்று மனம் மருகிப்போகிறது. நாய்க்குட்டிகளின் மரணம் அதீத வலியை தின்னக்கொடுக்கிறது. நான் சோர்ந்துவிட்டேன். என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. நான் இன்னும் நாய்குட்டிகளுக்கான அந்த வீட்டை கட்டிமுடிக்கவில்லை. பணம் இல்லாமல் பணிகள் பாதியில் நிற்கிறது. அந்த கட்டடத்தை பூச வேண்டும். மின்சாரம் வாங்க வேண்டும். பென்சிங் போட வேண்டும். நாய்குட்டிகள் அந்த நிலத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும். மற்ற நிலத்துக்காரர்களுக்கு தொந்தரவாகக் கூடாது. அதோடு உடல்நிலை சரியில்லாத நாய்குட்டிகளை தனித்தனியாக தங்க வைக்க அறை வேண்டும். கூண்டு அவர்களுக்கு ஆரோக்கியமானதாக இல்லை. நான் இன்னும் இரு தாய்மார்களுக்கு உதவ விரும்புகிறேன். அதில் ஒருவர் மிகவுமே உதவி தேவைப்படக் கூடியவர். மருத்துவ உதவியும் அவருக்குத் தேவை. குறைந்த பட்சம் உணவுத் தேவையையாவது பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகிறது. உதவுங்கள்… அவர் என்னிடம் வாக்கர் கேட்டார்… வாக்கர் வாங்குவதற்கான தொகையை யாரேனும் கொடுத்து உதவினால் மகிழ்வேன். வாகனங்களை நிதானமாக ஓட்டுங்கள். உங்கள் உயிர் உங்களுக்கு முக்கியம். ...