நாட்குறிப்பு - 23.01.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)
இந்த கடுமையான நாட்கள் என் வாழ்க்கையின்
இருண்ட காலம். நாய்க்குட்டிகள் எனக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சி அளித்ததோ, அந்த அளவிற்கு
வருத்தத்தையும், ஏச்சுக்களையும் கொடுத்தது. நாய்களால் பெருந் துயரத்திற்கு ஆளானேன்.
உன்னால முடிஞ்சா வளர்க்கனும், இல்லாட்டி எங்கயாச்சும் ரோட்டுல கொண்டு போய் விடு… குடும்பத்தினர்
பின்வாங்கத் துவங்கினர். உதவிகள் கிடைக்கவில்லை. மனச்சோர்வில் இருந்து வெளிவர நாய்க்குட்டிகள்
செய்த அத்தனை உதவிகளும், நாய்குட்டிகளாலேயே இயலாமைக்கும், மனச்சோர்விற்கும், தள்ளப்பட்டேன்.
ஒவ்வொரு நாய்குட்டி இறக்கும் போதும், நான் பெற்ற குழந்தைகளே இறப்பது போல மனமும் உடலும்
நடுங்கியது. முதல் முறை புத்திர சோகத்தை, முதல் கருப்பன் விபத்தில் இறந்த போது அடைந்தேன். அதன் பிறகு சில மாதங்கள் மகிழ்ச்சியும், அதன் பின்
சோகமுமாக கடந்தது.
சமீபத்தில் ஆறு நாய்குட்டிகளில் ஒரு ஆண்
குட்டி தான் மீதம், பயந்துகொண்டு போய் குடற்புழு நீக்கம் செய்ய கொண்டு வந்த ஒரு குட்டியை
அவள் தாயிடமே கொண்டு போய் விட்டேன். இரண்டு
நாட்களாக அவளைக் காணவில்லை. மனம் அவளை தேடுகிறது. என் இயலாமை என்னால் அவளைக் கண்டு
பிடிக்க முடியவில்லை. என் மனதிற்கு ஏற்றார் போல என்னோடு சேர்ந்து பணியாற்ற பணியாளர்
இல்லை. பணியாளர் தேவை அதிகம் இருக்கிறது. அதோடு நாய்களும், நாய்க்குட்டிகளும் சாலைவிபத்தில்
அதிகம் இறக்கிறது.
நான் எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன். ஆடுமாடுகள் கொல்லப்படுவதும், அவர்களின் உயிர் மனிதனுக்காக
சுரண்டப்படுவதும் மனதிற்கு வேதனை அளிக்கிறது. எல்லா உயிரினங்களும் தங்களை வளர்க்கும்
மனிதர்களை நம்புகிறது. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை. அவர்களை பணமாகவும் தொழிலாகவும்
காண்கிறார்கள்.
சரி அதை தவிர்ப்போம்
நாய்குட்டிகளுக்கு நான் தங்கியிருக்கும்
வீடு உகந்ததல்ல, அவர்களுக்கு வெயிலும் நிழலும் அவசியம். அவர்கள் திறந்தவெளியில் வளர்வது
தான் அவர்களுக்கு ஆரோக்கியம்.
தற்போது நாங்கள் 50 நாய்கள் மற்றும் நாய்குட்டிகளுக்கு
உணவும் மருத்துவமும் செய்து வருகிறோம். இந்த எண்ணிக்கை சில நேரம் கூடலாம். நாய்க்குட்டிகளின்
இறப்பின் காரணமாக சில நேரம் குறைந்து போகலாம்.
எங்களுக்கு பணியாளர் தேவை அதிகரிக்கிறது.
உடன் அவர்களுக்கான ஊதிய செலவுகளும் கூட. எங்களுக்கு உதவுங்கள்.
நன்றியும் அன்பும்
எங்களுக்கு உதவியவர்கள்…
எங்களுக்கு உதவுங்கள்.. உங்கள் உதவி எங்கள் நாய் குழந்தைகளுக்கு தேவையாக இருக்கிறது.
Comments
Post a Comment