நாட்குறிப்பு - 7.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)
அன்புள்ள நண்பர்களுக்கு,
ஒத்த கருத்துடையவர்கள் நண்பர்களாம்!
இந்த பதிவை நான் கடிதமாகத்தான் துவங்குகிறேன். பேரன்பும் கருணையும் உள்ள உங்களோடு பேசுகிறேன்.
எழுத்தாக வரும் என் குரலை செவிமடுத்து எனக்கு செவி சாயுங்கள்.
நான் தங்கள் அனைவரின் உதவிக்காகவும் காத்திருக்கிறேன்.
நாய்கள் எனக்காக காத்திருக்கிறார்கள். நான் அவர்கள் பார்வையில் எப்படி தென்படுகிறேன் என்று தெரியாது. நான் அவர்களுக்கு, அன்பையும் இரக்கத்தையும் உணவையும், மருத்துவ உதவிகளையும் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறேன்.
இதையெல்லாம் செய்ய உங்கள் உதவி எனக்கு தேவை.
ஒத்த கருத்துடைய நண்பர்கள் என் தேடலாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் செலவுகள் அதிகரிக்கிறது.
ஷெல்டர் கட்டவும், பென்சிங் போடவும் பணத் தேவைகளும் அதிகரிக்கிறது.
நான் கையில் எடுத்த நாய்கள் அருகில் உள்ளவர்களின் விளைநிலங்களுக்கு செல்வதால், விஷம் வைத்து கொள்வதாக அடிக்கடி கூறுகிறார்கள். எனக்கு தான் நாய்கள் குழந்தை, அவர்களுக்கு துன்பம் தரும் விலங்கு தானே.
அடிக்கடி இது போன்ற சூழலை சந்திப்பது பெரும் மன உளைச்சலை தருகிறது.
100 அடி அளவுள்ள பென்சிங் கம்பியின் விலை 5000 ரூபாய்
பென்சிங் போட 10000 அடிகளாவது தேவைப்படும்..
அதன் பிறகு இரும்பு ராடுகளுக்கும் தேவை.
வெல்டரின் ஊதியமும் இருக்கிறது.
உதவும் திறன் உடையவர்கள் உதவுங்கள்.
நாய்களுக்கான ஒரு நாள் உணவு 500 ரூபாய் ஆகிறது. சில நேரங்களில் அது 750 ரூபாயாக உயரும். நாய்களின் எண்ணிக்கையை பொறுத்து.
தங்களின் விசேஷமான நாட்களில் நாய்களையும் நினைவு கூறுங்கள்.
ஒரு நாள் உணவுக்கொடுங்கள்.
நல்ல திருப்தியான உணவு கொடுக்க நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் தேவையாக இருக்கிறது.
உதவி செய்யுங்கள்!
Comments
Post a Comment