நாட்குறிப்பு - 10.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

 இன்றொரு ஆச்சர்யமானா நாள்!


என் இயலாமை நிமித்தம் நான் இறந்துவிட வேண்டும் என்று மீண்டும் ஆசித்தேன். நேற்று இரவு மழை. மழையில் என்னால் நாய்களுக்கு உணவு கொடுக்க செல்ல முடியவில்லை. முன்பு போல் இல்லை. இப்போது மழை என்னை நடுக்கமுறச் செய்கிறது. குளிர் என்னை ஆட்கொண்டு வதைக்கிறது. 

இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அவர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள், நான் உணவு கொண்டு வருவேன் என்று காத்திருப்பார்கள்.  நான் போகாவிட்டாலும் அவர்களுக்கு உணவு கொடுக்க எப்படியும் எவரையேனும் அனுப்புவேன். அதற்கு நேற்று வாய்ப்பில்லாமல் போனது. 

காலையில் சீக்கிரம் வருகிறேன் என்று கூறிய திவ்யாவும் வரவில்லை. எனக்கு அழுகை வந்தது. அப்போது தான் காலை 5 மணிக்கு சங்கு ஊதிய அந்த நேரத்தில், ஏன் இன்னும் எனக்கு மரணம் வரவில்லை என்று தோன்றியது.

திவ்யா ஆறரை மணிக்கு வந்தாள்! நாங்கள் உணவு கொடுக்க போன போது, அங்கு ஒரு சம்பவம் அரங்கேறியது. மீண்டும் வசவுகள் அதை நாய்க்காரி நாவலில் விரிவாக எழுத இருப்பதால் இங்கு வேண்டாம். 

எனக்கு யாரையும் கஷ்டப்படுத்தும் நோக்கம் இல்லை.

ஷெல்டர் இருக்கும் இடம் சுற்றி பென்சிங் போட வேண்டும்.

இப்பொது மற்றொரு  நாய்களுக்கான தங்கும் கூடத்தை கட்டவிருக்கிறோம் அதற்கு வெல்டர் ஊதியம் 20, 000 ரூபாய் தேவையாக இருக்கிறது. வாய்ப்பும் மனமும் இருப்பவர்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள். 

என்னைடய மனத்தோய்வில் இருந்து என்னை மீட்டெடுக்கும் விதமாக இன்று மாதவன் ஆசிரியர் வந்திருந்தார். நீங்கள் கேள்வி கேட்டால் அவர் பதில் சொல்வார். எந்த கேள்வியாக இருந்தாலும். 

சமீபகாலங்களில் அவர் நாய்களுக்கு உணவளிப்பதில் பெரும் உதவி செய்துவருகிறார். அவரும் அவருடன் வந்தவர்களும் இன்று எனக்கு நல்லுணர்வையும், அன்பையும் உணர்த்தினார்கள்.

அவர்களுக்கு தெரியாமலேயே என் மரண ஆசையை தள்ளிப்போட்டார்கள். இந்த உணர்வு என்னுள் என் வாழ்நாளை அதிகமாக நீட்டித்தது. 

வந்தவர்கள் நாய்களுக்காக 26 கிலோ அரிசியும் கொடுத்தார்கள். நன்றியும் பேரன்பும்.

அரிசி இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். கவலைகளால் ஆகப்போவதென்ன?

மாதவன் ஆசிரியர்


நடமாடும் கடவுளர்கள் இன்னும் அநேகர்கள் இருக்கிறார்கள். அதில் சிலரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 


உங்கள் அன்பினால் என்னை தாங்குங்கள்.

 வாழ்த்துக்களும் பேரன்பும். 

உதவி செய்ய




தொடர்பு கொள்ள:9524753459
Email: heartbeattrust2008@gmail.com



நன்கொடையாக வந்த அரிசி










சாத்தனூர் கால்நடை மருத்துவமனை




கால்நடை மருத்துவமனைகளில் நாய்கள் கால்நடைகளாக, கருத்தில் எடுத்துக்கொள்வதே இல்லை. நாய்களுக்கு வெறிபிடிக்காமல் இருக்க மருந்துகள் போடப்படுகிறதே தவிர, நாய்களுக்கு ஏதும் நோய் தாக்காமல் இருக்க ஊசிகள்போடப்படுவதில்லை.  நோய் வந்துவிட்டால்  அதற்குரிய சிகிச்சைகளும் இல்லை. 


நாய்கள் பிரசவிக்க முடியாமல் அவதியுறும் போதும் அவசர ஊர்தியில் இடம் இல்லை. 

Comments

Popular posts from this blog

நாட்குறிப்பு - 7.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

நாட்குறிப்பு - 09.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)