நாட்குறிப்பு - 01.02.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

 

மனம் கனத்துக்கிடக்கிறது. கையில் எடுத்த வேலை பெரிதோ என்று மனம் மருகிப்போகிறது. நாய்க்குட்டிகளின் மரணம் அதீத வலியை தின்னக்கொடுக்கிறது. நான் சோர்ந்துவிட்டேன். என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

நான் இன்னும் நாய்குட்டிகளுக்கான அந்த வீட்டை கட்டிமுடிக்கவில்லை. பணம் இல்லாமல் பணிகள் பாதியில் நிற்கிறது. அந்த கட்டடத்தை பூச வேண்டும். மின்சாரம் வாங்க வேண்டும். பென்சிங் போட வேண்டும். நாய்குட்டிகள் அந்த நிலத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும். மற்ற நிலத்துக்காரர்களுக்கு தொந்தரவாகக் கூடாது. அதோடு உடல்நிலை சரியில்லாத நாய்குட்டிகளை தனித்தனியாக தங்க வைக்க அறை வேண்டும். கூண்டு அவர்களுக்கு ஆரோக்கியமானதாக இல்லை.

நான் இன்னும் இரு தாய்மார்களுக்கு உதவ விரும்புகிறேன். அதில் ஒருவர் மிகவுமே உதவி தேவைப்படக் கூடியவர். மருத்துவ உதவியும் அவருக்குத் தேவை. குறைந்த பட்சம் உணவுத் தேவையையாவது பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகிறது.

உதவுங்கள்…

அவர் என்னிடம் வாக்கர் கேட்டார்… வாக்கர் வாங்குவதற்கான தொகையை யாரேனும் கொடுத்து உதவினால் மகிழ்வேன்.

வாகனங்களை நிதானமாக ஓட்டுங்கள். உங்கள் உயிர் உங்களுக்கு முக்கியம். அதே போல, பிற உயிரினங்களின் உயிரும் இயற்கைக்கு முக்கியம்.



ஜனவரி மாத செலவு

முட்டை, பால், பருப்பு, மேட், லைசால், க.எண்ணெய், டஸ்பின் கவர் வாங்கிய செலவு – 3019 ரூபாய்

பெட்ரோல் – 2487 ரூபாய்

அரிசி – 1170 ரூபாய்

சத்துமாவு – 2250 ரூபாய்

சிக்கன் – 1200 ரூபாய்

மருத்துவ செலவு :1829 ரூபாய்

ஆக மொத்தம் 11,955 ரூபாய்

 

நன்கொடையாக வந்த தொகை

திரு.காமராஜ் ராதாகிருஷ்ணன் – 500 ரூ

திருமதி.கலைச்செல்வி பொதுப்பணித்துறை – 500 ரூ

திரு.சி.ஜெயபாரதன் கனடா 2000 ரூ

நன்கொடையாக வந்த மொத்த தொகை 3000 ரூபாய் மற்றும், Arunachala Animal Sanctuary . Tiruvannamalai –யில் இருந்து க்ளவுஸ் மற்றும், Ofloxacin and ornidazole oral solution சிரப் வாங்கி வந்தேன். எனவே அதுவும் நன்கொடை என்றே கருதுகிறேன்.

ஜனவரி மாதத்திய செலவை ஈடுகட்ட இன்னும் 8,955 ரூபாய் தேவையாக இருக்கிறது. மனம் இருப்பவர்கள் உதவி செய்யுங்கள்.

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் வாழப்பிறந்தவைகளே..

நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றியும் பேரன்பும்.


எங்களுக்கு உதவுங்கள்.








Comments

Popular posts from this blog

நாட்குறிப்பு - 7.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

நாட்குறிப்பு - 10.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

நாட்குறிப்பு - 09.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)