Posts

Showing posts from August, 2024

நாட்குறிப்பு - 10.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
 இன்றொரு ஆச்சர்யமானா நாள்! என் இயலாமை நிமித்தம் நான் இறந்துவிட வேண்டும் என்று மீண்டும் ஆசித்தேன். நேற்று இரவு மழை. மழையில் என்னால் நாய்களுக்கு உணவு கொடுக்க செல்ல முடியவில்லை. முன்பு போல் இல்லை. இப்போது மழை என்னை நடுக்கமுறச் செய்கிறது. குளிர் என்னை ஆட்கொண்டு வதைக்கிறது.  இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அவர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள், நான் உணவு கொண்டு வருவேன் என்று காத்திருப்பார்கள்.  நான் போகாவிட்டாலும் அவர்களுக்கு உணவு கொடுக்க எப்படியும் எவரையேனும் அனுப்புவேன். அதற்கு நேற்று வாய்ப்பில்லாமல் போனது.  காலையில் சீக்கிரம் வருகிறேன் என்று கூறிய திவ்யாவும் வரவில்லை. எனக்கு அழுகை வந்தது. அப்போது தான் காலை 5 மணிக்கு சங்கு ஊதிய அந்த நேரத்தில், ஏன் இன்னும் எனக்கு மரணம் வரவில்லை என்று தோன்றியது. திவ்யா ஆறரை மணிக்கு வந்தாள்! நாங்கள் உணவு கொடுக்க போன போது, அங்கு ஒரு சம்பவம் அரங்கேறியது. மீண்டும் வசவுகள் அதை நாய்க்காரி நாவலில் விரிவாக எழுத இருப்பதால் இங்கு வேண்டாம்.  எனக்கு யாரையும் கஷ்டப்படுத்தும் நோக்கம் இல்லை. ஷெல்டர் இருக்கும் இடம் சுற்றி பென்சிங் போட வேண்டும். இப்பொது ...

நாட்குறிப்பு - 09.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
மெல்ல மெல்ல தூசி போல தூரல் தரையை தொட்டுக்கொண்டிருந்தது. நானும் திவ்யாவும், ஷெல்டருக்கு சென்றோம் போகின்ற வழியிலேயே என்னை திட்டியவர்கள் என்னை கடந்தார்கள். முன்பெல்லாம் அவர்களை பார்த்து புன்னகைப்பேன். திட்டு வாங்கியப் பிறகு புன்னகை வரவில்லை. ஒதுக்கம் தான் வந்தது. சரி போகட்டும் எல்லாம் சரியாகிவிடும். அடுத்து என்ன? மூக்குக்கு மேலே சிராந்து எலும்பு தெரிந்த நாய் ஒன்றை பார்த்தேன். அது என்னை கண்டுக்கொள்ளாமல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த முறை வீடியோ எடுக்க என்னிடம் மொபைல் இல்லை. சில நேரம் இல்லை... இல்லை பல நேரம் மொபைலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.  மணி என்னை விரட்டினான். அவன் மீன் விற்பவர்களின் நாய். அவனின் காதினையும், வாலையும் அறுத்திருக்கிறார்கள். இது ஏதோ வழக்கமாக இருந்தாலும், பாவம் அவனுக்கு வலித்திருக்கும். அவன் மனிதர்களை கண்டால் பயப்படுவான்.  இரண்டு ட்யுமர் வந்த பெண் நாய்களை பார்த்தேன். இப்போது அருணாச்சலா காப்பகத்திற்கு போன் செய்ய முடியாது. விஷ்வா சாரை பார்த்தே வெகு நாட்கள் ஆகிவிட்டது. சில நேரம் அந்த நிறுவனம் முன்பு இருந்தது போல அன்னியோன்யமாக இல்லாமல், அந்நியமாகத் தெரிகிறது. ந...

நாட்குறிப்பு - 7.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

Image
அன்புள்ள நண்பர்களுக்கு, ஒத்த கருத்துடையவர்கள் நண்பர்களாம்! இந்த பதிவை நான் கடிதமாகத்தான் துவங்குகிறேன். பேரன்பும் கருணையும் உள்ள உங்களோடு பேசுகிறேன்.  எழுத்தாக வரும் என் குரலை செவிமடுத்து எனக்கு செவி சாயுங்கள். நான் தங்கள் அனைவரின் உதவிக்காகவும் காத்திருக்கிறேன். நாய்கள் எனக்காக காத்திருக்கிறார்கள். நான் அவர்கள் பார்வையில் எப்படி தென்படுகிறேன் என்று தெரியாது. நான் அவர்களுக்கு, அன்பையும் இரக்கத்தையும் உணவையும், மருத்துவ உதவிகளையும் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறேன். இதையெல்லாம் செய்ய உங்கள் உதவி எனக்கு தேவை. ஒத்த கருத்துடைய நண்பர்கள் என் தேடலாக இருக்கிறார்கள்.  ஒவ்வொரு நாளும் செலவுகள் அதிகரிக்கிறது. ஷெல்டர் கட்டவும், பென்சிங் போடவும் பணத் தேவைகளும் அதிகரிக்கிறது. நான் கையில் எடுத்த நாய்கள் அருகில் உள்ளவர்களின் விளைநிலங்களுக்கு செல்வதால், விஷம் வைத்து கொள்வதாக அடிக்கடி கூறுகிறார்கள். எனக்கு தான் நாய்கள் குழந்தை, அவர்களுக்கு துன்பம் தரும் விலங்கு தானே. அடிக்கடி இது போன்ற சூழலை சந்திப்பது பெரும் மன உளைச்சலை தருகிறது.  100 அடி அளவுள்ள பென்சிங் கம்பியின் விலை  5000 ரூபாய்...