நாட்குறிப்பு - 10.08.2024 -தமிழ்ச்செல்வி ஜி.ஜே (Managing Trustee)

இன்றொரு ஆச்சர்யமானா நாள்! என் இயலாமை நிமித்தம் நான் இறந்துவிட வேண்டும் என்று மீண்டும் ஆசித்தேன். நேற்று இரவு மழை. மழையில் என்னால் நாய்களுக்கு உணவு கொடுக்க செல்ல முடியவில்லை. முன்பு போல் இல்லை. இப்போது மழை என்னை நடுக்கமுறச் செய்கிறது. குளிர் என்னை ஆட்கொண்டு வதைக்கிறது. இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அவர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள், நான் உணவு கொண்டு வருவேன் என்று காத்திருப்பார்கள். நான் போகாவிட்டாலும் அவர்களுக்கு உணவு கொடுக்க எப்படியும் எவரையேனும் அனுப்புவேன். அதற்கு நேற்று வாய்ப்பில்லாமல் போனது. காலையில் சீக்கிரம் வருகிறேன் என்று கூறிய திவ்யாவும் வரவில்லை. எனக்கு அழுகை வந்தது. அப்போது தான் காலை 5 மணிக்கு சங்கு ஊதிய அந்த நேரத்தில், ஏன் இன்னும் எனக்கு மரணம் வரவில்லை என்று தோன்றியது. திவ்யா ஆறரை மணிக்கு வந்தாள்! நாங்கள் உணவு கொடுக்க போன போது, அங்கு ஒரு சம்பவம் அரங்கேறியது. மீண்டும் வசவுகள் அதை நாய்க்காரி நாவலில் விரிவாக எழுத இருப்பதால் இங்கு வேண்டாம். எனக்கு யாரையும் கஷ்டப்படுத்தும் நோக்கம் இல்லை. ஷெல்டர் இருக்கும் இடம் சுற்றி பென்சிங் போட வேண்டும். இப்பொது ...